மீண்டும் தக்காளி விலை கிடு கிடு உயர்வு….. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி…!!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில் கத்தரிக்காய் விலையும் சதம் அடித்தது. காய்கறிகளின் விலை 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் காய்கறிகளை அளவோடு வாங்குவதாகவும், இதனால் முன்பு இருந்தது போல் வியாபாரம் இல்லாத நிலை இருப்பதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *