தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோன்று தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீசானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாரிசு திரைப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாகவும் துணிவு திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் பிப்ரவரி 10-ஆம் தேதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். தியேட்டர்களை போன்று ஓடிடி தளங்களிலும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவியின் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.