“மீண்டும் ஒரு நிர்பயா”… டெல்லியில் நடந்தது போல்… மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த சம்பவம் போலவே மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண்ணை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து உள்ளது தெரிய வந்தது. பிறகு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகின்றது. மேலும் இந்த சம்பவம் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தில் அரங்கேறியுள்ளது. அந்த வாகனத்துக்குள் ரத்தக்கறை படிந்திருந்தது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மோகன் சவுகான் ஆகும். பெண் சித்திரவதை செய்யப்படுவதை பார்த்து யாரோ ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒரு பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.