மீண்டும் உச்சம் தொடும் காய்கறிகள் விலை…. இதோ மொத்த விலை பட்டியல்….!!!!

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை.

இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தக்காளி உள்ளிட்ட ஒருசில காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70  உயர்த்தப்பட்டுள்ளது. வெங்காயம் விலை நேற்று ரூ.40 இருந்து ரூ.38  குறைந்துள்ளது. பீட்ரூட் விலை ரூ.70 ரலிருந்து ரூ.90 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180 மற்றும்  கேரட் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை பட்டியல் தக்காளி – ரூ.70, வெங்காயம் – ரூ.38, அவரைக்காய் – ரூ.60. பீன்ஸ் – 45, பீட்ரூட் – ரூ.90, வெண்டைக்காய் – ரூ.90, நூக்கல் – ரூ.40, உருளைக் கிழங்கு – ரூ.30, முள்ளங்கி – ரூ.35, புடலங்காய் – ரூ.60, சுரைக்காய் – ரூ.60, பாகற்காய் – ரூ.60, கத்தரிக்காய் – ரூ.70, குடை மிளகாய் – ரூ.100, கேரட் – ரூ.90, காளிபிளவர் – ரூ.60, சவுசவு – ரூ.20, தேங்காய் – ரூ.30, முருங்கைக்காய் – ரூ.180, இஞ்சி – ரூ.60,  பச்சை மிளகாய் – ரூ.45, கோவைக்காய் – ரூ.60

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *