மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி… செல்வராகவன் போட்ட ட்வீட்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்…!!!

இயக்குனர் செல்வராகவன் , நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இணைந்து பணிபுரிந்த துள்ளுவதோ இளமை ,புதுப்பேட்டை ,காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணிபுரியவுள்ளனர் என தகவல்கள் பரவி வந்தது . இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் .

அதில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷ் ,செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய முப்பெரும் வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .