“மீண்டும் அதிரடி பணியிட மாற்றம்”….. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!

25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. நேற்று 37 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ” விழுப்புரம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜெயஸ்ரீ நெல்லை மாவட்டட வருவாய் அலுவலராகவும், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் திருச்சி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் சென்னை 44வது செஸ் ஒலிம்பியாட் வருவாய் அலுவலராகவும், கோவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா சேலம் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா சென்னை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட வருவாய் அலுவலராகவும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் 2வது கட்டம் (நில எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரயணன் சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட வருவாய் அலுவலராகவும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கோபாலன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன சட்ட அலுவலராகவும், சென்னை வருவாய் நிர்வாக ஆணையரக துணை ஆணையர் (நிர்வாகம்) ரவிக்குமார் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மாவட்ட வருவாய் அலுவலராகவும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

அதேபோன்று நெல்லை தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) மாரிமுத்து தூத்துக்குடி இஸ்ரோ (நில எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலராகவும், மதுரை மாநகராட்சி துணை ஆட்சியர் ரமேஷ் சென்னை மெட்ரோ ரயில் நிலைய மாவட்ட வருவாய் அலுவலராகவும், சேலம் துணை ஆட்சியர் தனலிங்கம் தமிழ்நாடு தகவல் ஆணைய மாவட்ட வருவாய் அலுவலர் என 6 பேருக்கு பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.