தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில் அவரிடம் பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இது தொடர்பாக தேர்தல் சமயத்தில் பரிசீலனை செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். முன்னதாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக கட்சியினரை விமர்சித்ததோடு மறைந்த தலைவர்களையும் விமர்சித்தார்.

இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்தார். அதன்பிறகு இனி பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க வாய்ப்பே கிடையாது என்றும் கூறியிருந்தார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கட்சி கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியாகும் வேளையில் தற்போது பாஜகவுடன் கூட்டணி தொடர்பான அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதனால் பாஜக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.மேலும் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைப்பதாக வெளிவந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.