மிளகு நல்லதுதான்… அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வரும்… கொஞ்சமா சாப்பிடுங்க..!!

கருப்பு மிளகை அதிக அளவில் நாம் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் நமக்கு ஏற்படும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.

மிளகில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் கருப்பு மிளகு கூடுதலான சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது பல பிரச்சினைகள் நமக்கு வரும். அப்படி என்னென்ன பிரச்சினைகள் நமக்கு வருகிறது என்பதை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம். மிளகு இயற்கையாகவே சளித் தொல்லை, இருமல் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்தியாவில் மக்கள் இதை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.

ஆனால் கருப்பு மிளகை நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சில பக்கவிளைவுகள் நமக்கு வரும். நீங்கள் கருப்பு மிளகை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு இது அதிக அளவு பிரச்சனையே தரும். சரும எரிச்சல் போன்றவற்றை ஏற்படும். சருமம் சிவந்து எறியும் உணர்வைத் தரும். கர்ப்பகாலத்தில் பெண்கள் கருப்பு மிளகை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது .இதை அதிகமாக சாப்பிடும் போது நேரடியாக கர்ப்பப்பையை பாதிக்கின்றது .

கருப்பு மிளகை மாத்திரையாக உட்கொண்டால் வயிற்று வலி மற்றும் இரைப்பை குடல் விளைவை ஏற்படுத்தும். இதனால் இதை குறைவாக உட்கொள்வது மிகவும் நல்லது. கருப்பு மிளகு உடலில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக உள்ளது. ஆனால் கருப்பு மிளகை துளசி போன்ற மூலிகை உடன் சேர்த்து பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக பயன்படுத்துவது மிகவும் நல்லது. கருப்பு மிளகு வயிறு, தொடை போன்ற பகுதிகளில் எரிச்சலை உண்டாக்கும். கருப்பு மிளகு குறைந்த அளவு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *