மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களா?… மாஸ் காட்டும் அஜித், விஜய் பட நடிகரின் 4 மகள்கள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் கிருஷ்ணகுமாரின் நான்கு மகன்களுக்கும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் பாலோயர்கள் உள்ளனர் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் நடிகை அசினுக்கு அண்ணனாக நடித்து பிரபலமடைந்தவர் கிருஷ்ணகுமார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். மேலும் இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அஹானா, தியா, இஷானி, ஹன்சிகா ஆகிய நான்கு மகள்கள் உள்ளனர் .

இவர்களில் அஹானா தற்போது மலையாள திரையுலகில் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணகுமாரின் நான்கு மகள்களில்  ஒவ்வொருவருக்கும் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். இவர்களின் ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறதாம். மேலும் நடிகர் கிருஷ்ணகுமார் தனது மனைவி மற்றும் 4 மகள்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.