மிரட்டலான லுக்கில் அஜய் தேவ்கன்… தெறிக்கவிடும் ‘ஆர் ஆர் ஆர்’ பட மோஷன் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

அஜய் தேவ்கன் பிறந்த நாளை முன்னிட்டு ஆர் ஆர் ஆர் படக்குழு அட்டகாசமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அஜய் தேவ்கன் பிறந்தநாளை முன்னிட்டு ஆர் ஆர் ஆர் படக்குழு அட்டகாசமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது . நடிகர் அஜய் தேவ்கன் மிரட்டலான லுக்கில் உள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.