மியான்மரில் தொடர் போராட்டம்… 510 பேர் பலி …சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா கடும் கண்டனம்…!!!

மியான்மரில் ராணுவப் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் என 510 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

மியான்மரில் ஜனநாயக ஆட்சி முறையில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கடந்த 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அதனால் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதில் கடந்த 27ஆம் தேதி அன்று  ஒரே நாளில் 114 பேர் சுட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பல கோரிக்கைக்கு பிறகு அவர்களை விடுதலை செய்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் மியான்மார் ராணுவத்துக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது ஈவு இரக்கமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டு வருகிறது .

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போதுவரை 510 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பரிதாபமாகஉயிரியிழந்துள்ளனர்.   மேலும் ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதனால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் கெய்ன் மாகாணத்தில் வசிக்கும் கரேன் என்ற இனத்தைச் சேர்ந்த மக்களும் ராணுவத்துக்கு எதிரான போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதனால் அந்தப் போராட்டத்தை ஒடுக்க விதமாக மியான்மார் ராணுவம் வானில் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி வருகின்றன. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாய்லாந்து நாட்டுக்கு தப்பி ஓடி உள்ளனர். இந்நிலையில் மியான்மார் நாட்டுடன் வர்த்தக உறவுகளை நிறுத்திக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதையடுத்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி காத்தரீன் டை மியான்மரில் புதிய அரசு தேர்ந்தெடுக்கும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.