தமிழகத்தில் அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறைகளில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரு விளக்கு,குடிநீர் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்