பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மின் ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாளை நடைப்பெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்ததோடு, தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.