மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி…? இதோ எளிய வழிமுறைகள்..!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் பயனாளர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதனை பயனர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செய்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

  • முதலில் நீங்கள் தமிழக மின்வாரியத்தில் அதிகாரபூர்வ இணையதளமான www.tneb.gov.in செல்ல வேண்டும்.
  • அங்கு Consumer info அல்லது நுகர்வோர் தகவல் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும்.
  • அதன் பின் நீங்கள் உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிடவேண்டும்.
  • கிழே நீங்கள் உரிமையாளரா? அல்லது வாடகைக்கு குடி இருப்பவரா? என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நீங்கள் எதுவோ அதை கிளிக் செய்து பின்னர் உள்ளே செல்லவும்.
  • அங்கு உங்களின் ஆதார் எண், ஆதார் அட்டையில் இருப்பது போன்ற பெயர் மற்றும் அடையாள அட்டையின் புகை படம் என மூன்று கேட்கப்படும்.
  • அடையாள அட்டையின் புகைப்படம் 500KB அளவிற்கும் குறைவாக இருக்கவேண்டும்.
  • இதனால் உங்களின் ஆதார் புகை படத்தை எடுத்த பின் புகை படத்தின் அளவை 500KB கீழ் சிறிதாக்கி பதிவிடவும். இதற்கு Google Play Store பல செயலிகள் வைத்துள்ளது. அவற்றை பயன்படுத்தி நீங்கள் உங்களின் படத்தை சிறிதாக்கலாம்.
  • பின்னர் OK கிளிக் செய்தால் உங்கள் ஆதார் எண் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை பதிவு செய்யவில்லை என்றால் உங்களுக்கு கிடைக்கும் 100 யூனிட்களுக்கான சலுகை கிடைக்காது. இதனை மத்திய அரசு அமல்படுத்தியதை தொடர்ந்து மாநில அரசும் அமல்படுத்தியுள்ளது. இதில் முதல் 100 யூனிட்டுகள் இலவசமாகவும் அதனை தொடர்ந்து மாத இறுதியில் 500 யூனிட்களுக்கும் குறைவாக மொத்த மின்பயன்பாடு இருந்தால் அடுத்ததாக உள்ள 100 யூனிட்டுகள் விலை 50% குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.