இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, முகவரி சான்று உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.