மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… சோக சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள பிரம்மன்படா உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனந்த மௌலே என்பவரின் வீட்டில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது .

அதிகாலை 2 மணி அளவில் தனது மனைவி நான்கு குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஆனந்த் திடீரென்று வீட்டில் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.