மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமா….? தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான சைலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மருதகுளத்திற்கு சென்ற சைலப்பன் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சைலப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து சைலப்பனின் உறவினர்கள் நெல்லை-அம்பை பைபாஸ் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *