திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் தந்தையுடன் திவாகர் பெரமூர் பகுதியில் கோரை வயலில் காய வைக்கப்பட்ட கோரையை அள்ளுவதற்கு தந்தையுடன் சென்றுள்ளார்.
அந்த நேரம் திடீரென இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. இதில் திடீரென தங்கராசு மீது மின்னல் தாக்கி மயங்கி சரிந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மகன் திவாகர் தனது செல்போனில் உதவி கேட்பதற்காக உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். செல்போன் சிக்னல் அலை மூலமாக மின்னல் திவாகரை வேகமாக தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே திவாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த உறவினர்கள் வயலுக்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
மின்னல் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தங்கராசை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று திவாகரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கியதில் இருவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.