மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல்… விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விலை பொருட்களை தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலமாக மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் பகுதி விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலமாக சுமார் 300 தேங்காய்கள் கொள்முதல் நடைபெற்றது.

இதில் அதிகபட்ச விலையாக ஒரு குவின்டால் ரூ.2,300 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,100-க்கும் கொள்முதல் நடைபெற்றுள்ளது. விவசாயிகளின் இடத்திற்கே சென்று பரிவர்த்தனை செய்யப்படுவதால் அவர்களுக்கு ஏற்று கூலி, இறக்கு கூலி, போக்குவரத்து செலவு, காலவிரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கப்படுகிறது. இதன் மூலமாக பணமும் உடனடியாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply