தமிழகத்தில் மின்தடை காரணமாக தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய தகவல்களை பதிவேற்றும் பணிகள் நடைபெறாது என்று அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மற்றும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும். இதனைத் தொடர்ந்து இன்று நண்பர்கள் 12:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய விவரங்கள் ஏதும் பதிவேற்றம் செய்யப்படாது. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி முதல் இணையதள பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.