மின்சார வாகனத்திற்கு மானியம்… ரிவோல்ட் வரவேற்பு…!!!

மின்சார வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும்.

ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் மின்சார வாகனத்தின் மீது அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அரசும் இது போன்ற சலுகைகளை வழங்கி வருவதால் மின்சார வாகனத்தின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *