தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் கிருபா பொன் பாண்டியன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த கார் வல்லம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மினி லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருபா பொன்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு லாரி ஓட்டுநர் நெடுஞ்செழியன் மற்றும் அவருடன் வந்த மேத்யூ ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வல்லம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.