மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்”…. வெளியான வீடியோ…. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்…..!!!!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகிய பல முன்னணி பிரபலங்கள் நடித்து உள்ளனர்.  இத்திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.

நீண்டஇடைவேளைக்கு பின் இந்த படத்தின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் அனுஷாவாக ராஷி கண்ணாவும், ரஞ்சனியாக பிரியா பவானி சங்கரும், ஷோபனாவாக நித்யா மேனனும், நீலகண்டனாக பிரகாஷ்ராஜும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இப்போது தனுஷ் நடித்திருக்கும் கதாப்பாத்திர அறிமுக வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது. இதை தனுஷ் அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகிவரும் இந்த படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *