மிதுன ராசிக்கு…செலவு உண்டாகும்…தைரியம் அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….! இன்று நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். ஆனால் நினைத்தபடி வருமானம் இருக்காது. தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பதவி அல்லது இட மாற்றங்கள் ஏற்படலாம். மன தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வருமானம் இன்றிருக்கும். தன்னம்பிக்கை கூடும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். வாகனச் செலவு கொஞ்சம் ஏற்படும்.

புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் ஓரளவு பலன் கொடுக்கும். இப்போதைக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து, வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியைப் பற்றிய சிந்தனை மற்றும் இருந்து கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

இன்று காதலர்களுக்கு கொஞ்சம் சிறப்பான நாளாக இருந்தாலும் வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *