மிதுன ராசிக்கு…செலவுகள் அதிகரிக்கும்…ஆர்வம் கூடும்…!

மிதுன ராசி அன்பர்களே …!    இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். பணவரவு வாக்குவன்மை குடும்பத்தில் சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்து விஷயங்களையும் ஓரளவு நல்ல படியாக இருக்கும். இன்று கணவர் மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.அவர்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

பெண்களுக்கு மனதில் குழப்பம் அவ்வப்போது வந்து செல்லும். செலவுகள் மட்டும் இன்று தயவுசெய்து கட்டுப்படுத்த வேண்டும். உங்களிடம் ஆலோசனை கேட்டு நாடி வருவோரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே கொடுக்கும்.சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். மனம் அமைதியாக இருக்கும்.அரசாங்க காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடல் உஷ்ணம் போன்றவை இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுபோலவே இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *