மிதுனம் ராசிக்கு.. பொது வாழ்வில் புகழ் கூடும்… பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்..!!

 மிதுனம் ராசி அன்பர்களே..!  இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். இன்று பொருளாதார நிலையில் சங்கடங்களை கொஞ்சம் சந்திக்கக்கூடும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் தொகை கிடைப்பதில் கூட தடைகள் ஏற்படலாம். பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்களும் , ஒற்றுமைக் குறைவுகளும் கொஞ்சம் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

இன்றைய நாள் ஓரளவு மதிப்புமிக்க நாளாகவே இருக்கும். பேசும் பொழுது மட்டும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் இன்றைய நாள் உங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். இன்று  மாணவச் செல்வங்கள் எந்தவித தடையுமின்றி கல்வியில் முன்னேறி செல்வர்கள். அதேபோல கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாகவே செல்லுங்கள். இன்று வாகனத்தை சரி செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்றை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்