மிதுனம் ராசிக்கு…பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும்.. பெருமை கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பிரபலங்களின் சந்திப்பால் பெருமை கூடும் நாளாகவே இருக்கும். தொட்ட காரியம் வெற்றியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கரைக்கு ஆதாயம் கிட்டும். இன்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள்.

தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் ஈட்டுவீர்கள். இன்று பணம் பலவழிகளில் பையை நிரப்பும். இன்று  சொன்ன சொல்லையும் நிறைவேற்றி காட்டுவீர்கள். காதலர்களுக்கு இன்று காதல் கைக்கூடும் நாளாகவே அமையும். மாணவச் செல்வங்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் உங்களுக்கு கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.

என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் வாரவாரம் எப்பொழுதும் போலவே காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்டமான திசை: வடக்கு