மிதுனம் ராசிக்கு… தெய்விக சிந்தனை மேலோங்கும்… பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். தேவைகள் அனைத்துமே இன்று பூர்த்தியாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று செலவு மட்டும் கட்டுக்கடங்காமல் இருக்கும். நட்பு மத்தியில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். இடமாற்றம் கொஞ்சம் இருக்கும்.

நெருங்கியவர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவிகள் செய்வார்கள் என்றாலும், உங்களை சுற்றி இருக்கும் கூட்டத்தை முழுவதுமாக நம்பி விடாமல் இருப்பது ரொம்ப நல்லது. கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும் கொடுக்கல் வாங்கல்கள் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் உங்களுக்கு அமையும். உங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். கல்வியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கப்பெற்று நிம்மதியாக இருப்பீர்கள். நல்ல முன்னேற்றம் அடைவீர்கள், நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் சிவப்பு நிறம்