மிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்…. ஏசர் நிறுவனம் அதிரடி….!!!!

இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு TV மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து இரு TV-க்களும் Android TV 11 ஒஎஸ், டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய TV மாடல்களில் H சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் TV-க்களில் 3 ஆண்டுகள் வாரண்டியுடன் பிரீமியம் மெட்டல் பினிஷ், ஷெல் பாடி மற்றும் ஃபிரேம்லெஸ் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

இவை 32 இன்ச் HD, 43 இன்ச் UHD, 50 இன்ச் UHD, 55 இன்ச் UHD மற்றும் 65 இன்ச் UHD டிஸ்ப்ளே, பிளாக் லெவல் ஆக்மெண்டேஷன், ஸ்மார்ட் புளூ லைட் ரிடக்‌ஷன், HDR 10+, HLG சப்போர்ட், சூப்பர் பிரைட்னஸ், பிளாக் லெவல் ஆக்மெண்டேஷன் என ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.  ஏசர் அறிமுகம் செய்துள்ள புதிய டிவி மாடல்கள் விற்பனை முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் அதிக சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கின்றன. 32 இன்ச் HD டிவி ரூ. 14,999,  43 இன்ச் UHD டிவி ரூ. 29, 999, 50 இன்ச் UHD டிவி ரூ. 34 , 999, 55 இன்ச் UHD டிவி ரூ. 39, 999 65 இன்ச் UHD டிவி ரூ. 64, 999 ஆகும்.