தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. அனைவரும் புத்தாடை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது என இந்த வாரம் முழுவதும் கலகலவென இருக்கும். தீபாவளி அன்று பட்டாசு வெடித்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பண்டிகையை நம் மக்கள் கொண்டாடி தீர்ப்பர் ஆனால் ஒரு சிலர் தற்காலிக சந்தோஷத்திற்காக கெத்து காட்டுவதாக நினைத்து ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்து தங்களையும் தங்களை சுற்றியுள்ளவர்களையும் காயப்படுத்துவதை ஒவ்வொரு வருடமும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் தீபாவளி தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு கூட்டம் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்து அதனால் காயமடைந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர். அதன்படி,
கையில் ஆபத்தான வெடி ஒன்றை பிடித்து அதை பற்ற வைத்து தூக்கி எறிய கையில் மட்டை ஒன்றை வைத்து அந்த வெடியை சிக்ஸர் அடிக்க நினைத்து அது மிஸ் ஆகவே அது அவரது அந்தரங்க பகுதிக்கு நடுவில் கீழே விழ அவர் தலை தெறிக்க ஓட முயல்கிறார். இதில் அவர் காயம் அடைந்தாரா ? இல்லையா ? என்பது குறித்த தகவல்கள் வெளியாக விட்டாலும் என்ன ராமலிங்கம் ஆளையே பார்க்க முடியல என காமெடியாக அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டிருந்தாலும்
இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒரு வேலை வெடித்திருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கும் காயம் அதிகமாக இருந்திருக்கும். அது அவரது வாழ்நாள் முழுக்க அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியிருக்கும் எனவே இது போன்ற ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
View this post on Instagram