மாஸ்டர் ரிலீஸ் தேதி மாற்றம்?… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு திரைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மாற்ற திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி மாஸ்டர் வெளியாகலாம் என கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு அன்று இதுகுறித்து அப்டேட் வர வாய்ப்புள்ளது. ஒருவேளை மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப் போனால் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகலாம்.