‘மாஸ்டர்’ பட இயக்குனருடன் இணையும் செம மாஸான ஹீரோ… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . நடிகர் பிரபாஸ் தற்போது ராதேஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய பிரம்மாண்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் இந்த படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .