மாஸ்டர் படக்குழுவின் வாழ்த்துக்கு லைக் போடாத ஆண்ட்ரியா … அதிருப்தியில் இருக்கிறாரா?… ரசிகர்கள் குழப்பம்…!!!

மாஸ்டர் படக்குழு மீது நடிகை ஆண்ட்ரியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் நடித்துள்ளனர் . மேலும் அர்ஜுன் தாஸ், ஆன்ட்ரியா, சாந்தனு சஞ்சீவ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளன்று ‘மாஸ்டர்’ படக்குழுவினர்  ஆண்ட்ரியா மற்றும் நடிகர் விஜய் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர் .

Andrea Jeremiah's role in 'Master' revealed

இதேபோல் பிசாசு-2 படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து கூறினர் . இதில் பிசாசு-2 பட போஸ்டரை சமூகவலைத்தள பக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார். ஆனால் மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை லைக் கூட செய்யவில்லை . மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா  கலந்து கொள்ளவில்லை.  இதனால் ஆண்ட்ரியா மாஸ்டர் படக்குழு மீது அதிருப்தியில் இருக்கிறாரா? என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.