“மாவட்ட செயலாளர் பதவி”…. 11 வருஷத்துக்கு அப்புறம் விட்டுக்கொடுத்த ஈபிஎஸ்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

சேலம் புறநகர் மாவட்டம் அதிமுக செயலாளராக சென்ற 11 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இந்நிலையில் 2011-16 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார். இதையடுத்து 2016 ஆம் வருடம் மீண்டுமாக அதிமுக ஆட்சியை பிடித்தது. அப்போது அதே அமைச்சர் பதவிகளில் எடப்பாடி பழனிசாமி நீடித்து வந்தார். அடுத்ததாக ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

அந்த சமயத்திலும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையிலும் அவர் கட்சியின் மாவட்ட செயலாளராக நீடித்தார். கடந்த 25ஆம் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி அமைப்பு தேர்தல் மனு வாங்கும்போதும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தார்.

மேலும் அந்த நேரத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனையும், மாவட்ட செயலாளருக்கு மனு அளிக்க செய்தார். பின் மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், அவரது நண்பரான இளங்கோவன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்ற 2011ஆம் ஆண்டு முதல் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்த பழனிசாமி 11 வருடங்களுக்கு பின் அந்த பதவியை விட்டுக்கொடுத்து இளங்கோவனுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *