மாலைக்குள் பூத் சிலிப்கள் வழங்கப்படும்…. தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!!

இன்று மாலைக்குள் எல்லாத் தொகுதிகளிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அவர் தெரிவித்தார்.