மாலி நாட்டில் நடைபெற்ற ஜெட் விமான தாக்குதல்…. உண்மையை மறைத்த பிரான்ஸ்…. தகவலை வெளியிட்ட ஐநா…!!

பிரான்ஸ் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மாலி நாட்டில் உள்ள தீவிரவாதிகள் அழிப்பதற்காக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் “இந்த தாக்குதல் இரண்டு ஜெட் விமானம் மூலம் போண்டி கிராமத்தில் நடத்தப்பட்டதாகவும், இதில் தீவிரவாதிகள் மட்டும் தான் கொல்லப்பட்டதாகவும், அக்கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை” என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் சபை இத்தாக்குதல் குறித்து மேற்கொண்ட விசாரணையில் அக்கிராமத்தில் ஒரு மாதம் திருமணம் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும், அதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளியில் இருந்து அந்த கிராமத்தில் வந்திருப்பதும் ,அதில் ஐந்து தீவிரவாதிகள் கலந்து கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் பிரான்ஸ் ராணுவம் அந்த தீவிரவாதிகளை குறி வைக்கும் போது திருமண விழாவில் பங்கேற்ற பொது மக்களின் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மூலம் நடந்த இந்த தாக்குதலில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் அரசு எதுக்கு முன்னுக்கு பின்னாக தகவல்களை கூறியுள்ளது என்பது குறித்து ஐநா தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.