தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாகவுள்ள திட்ட அலுவலர் பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வருகிற 23ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம்.

பணி-திட்ட அலுவலர், காலியிடங்கள்-4

பணி- புள்ளி விவர ஆய்வாளர், காலியிடங்கள்- 1

பணி- முதுநிலை கணக்காளர், காலியிடங்கள்-1

பணி-மாவட்ட திட்ட அலுவலர், காலியிடங்கள்-32

பணி- கணக்களார், காலியிடங்கள்-15

தகுதி இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை- நேர்முகத் தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை- https://scd.tn.gov.in எனும் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்குரிய கடைசிதேதி 23/02/2023 ஆகும்