இலங்கையில் மாற்று திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நேற்று இவ்விரண்டு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் எடுத்து 198 ரண்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 118 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.