தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 1000-க்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை முதலே குவிந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, “தி.மு.க ஆட்சியில் அமருவதற்கு முன்பாக ஒரு நிலைபாடு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலைபாடு என இருக்கின்றனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அடுத்து வாக்குப்பதிவு இயத்திரத்தின் ஆலோசனை கூட்டத்தில், தேமுதிக சார்பாக டெல்லியில் யார் கலந்துகொள்வார்கள் என்பதை தலைமை கழகம் பின்னர் அறிவிக்கும். உண்மையிலேயே அது பயன் அளிப்பதாக இருப்பின் அதனை தே.மு.தி.க ஆதரிக்கும்” என அவர் தெரிவித்தார்.