இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி தன்னுடைய ஏழு மாடல் கார்களில் 17,362 கார்களை திரும்ப பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஆல்டோ கே 10 ,எஸ்- பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா போன்ற ஏழு மாடல் கார்களின் காற்றுப் பைகளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 17,000 கார்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இவை அனைத்தும் 2022 -ஆம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இந்த கார்கள் திரும்ப பெறப்பட்டு அவற்றின் காற்று பைகள் பரிசோதனை செய்யப்பட்டு  தேவை ஏற்பட்டால் கட்டணம் இல்லாமல் மாற்றி தரப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.