மாரி செல்வராஜ் இயக்கும் “மாமன்னன்”…. படத்தில் திடீர் ட்விஸ்ட்…. புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதனையடுத்து தற்போது மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் உதயநிதி ஹீரோ இல்லை என்றும் நடிகர் வடிவேலுதான் மாமன்னன் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாமன்னன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *