மாயமான வாலிபர்… கிணற்றில் மிதந்த பிணம்… பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…!!

ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான வாலிபர் உயிரிழந்து கிணற்றில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கொங்குவார்பட்டியில் முகமது ஹமீம் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அமீர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது தந்தை ஜவகர் சாதிக் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முகமது ஹமீமை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் கெங்குவார்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபரின் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் உயிரிழந்த இளைஞன் ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான முகமது ஹமீம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிற்க்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் முகமது ஹமீம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *