மாயமான மோட்டார் சைக்கிள்….. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாணம்பட்டு பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போனதைக் கண்டு சத்தியநாராயணன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சத்தியநாராயணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *