
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமனார் சக்திவேல் வீட்டிற்கு சென்று விட்டு மாமியார் அமுதாவோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதனலையில் வடகால் விஜியன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே மது போதையில் நின்ற பூபாலன் கமலேஷ் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் ஹரிதாசின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.
மேலும் ஹரிதாசை அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஹரிதாசை அமுதா அக்கம் பக்கத்தினர் உதவியோடு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பூபாலன், ஆனந்த், கமலேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.