தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் தற்போது கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2, நடிகர் சிம்புவின் பத்து தல போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் பணத்திற்காக தான் நடிக்க வந்ததாக பேட்டி கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவிய நிலையில் தற்போது பிரியா பவானிசாகர் தான் அப்படி  கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்து ஒரு வலைதள பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மாப்பிள்ளை சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவாராம் அப்படிங்கற மாதிரி நீங்க சொல்றது இருக்குது. ஆரம்பத்தில் நான் எதிர்வினை ஆற்றவில்லை.

ஆனால் இது போன்ற செய்திகளை நம்பகத்தன்மையோடு கொண்டு செல்கிறார்கள். நான் இந்த விஷயத்தை சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தாலும் என்ன தவறு இருக்கிறது. எல்லோருமே பணத்திற்காக தான் வேலை செய்கிறார்கள். இது ஒரு நடிகரிடம் இருந்து வரும் போது மட்டும் எதற்காக கீழ்த்தரமானதாக பார்க்கப்படுகிறது. நான் என்னுடைய வழியில் முன்னேறி விட்டேன். நான் யாரையும் மலிவாகவும் கீழ்த்தரமாகவும் பேச மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.