மாப்பிள்ளையை பார்க்க சென்ற பெண் வீட்டார்…. விருந்து சாப்பிட்ட 11 பேருக்கு வாந்தி-மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்ட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாரங்கியூர் கிராமத்தில் அரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா என்பவரின் குடும்பத்தினர் மாப்பிள்ளையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் உணவு சாப்பிட்ட உத்திராபதி, சரவணன், சிவக்குமார், ஏழுமலை உள்பட பெண்வீட்டார் 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *