ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அரிசியின் விலை உயர்ந்து வருவதால் மத்திய தொகுப்பில் இருந்து மானிய விலையில் அரிசியை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானிய விலை அரிசியை மத்திய அரசு நிறுத்தியிருக்கிறது. இதனால் ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.