
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனிடையே அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் தண்டபாணி என்பவர் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி 16 வயது சிறுமியிடம் கூறியுள்ளார்.
ஆனால் சிறுமியிடம் மாந்திரீகம் செய்தால் உடல்நலம் சரியாகிவிடும் என கூறி பூஜை செய்வது போல பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தண்டபாணியை கைது செய்தனர்.