மாநில அரசு, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு…. இனி வீடுதேடி வரும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மாநில அரசு ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும் பெறுவோர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் எவ்வித சிரமமும் இன்றி தங்களின் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்ப்பிக்கலாம். இச்சேவை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் ஆதார்நகல், மொபைல் எண், பி.பி.ஓ. எண், ஓய்வூதிய கணக்கு விபரங்கள் போன்றவற்றை தபால்காரரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்க முடியும்.

இந்த வருடம் சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வரும் செப்டம்பர் மாத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஓய்வூதியதாரர்கள் அஞ்சல் துறையால் வழங்கப்படும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *