மாநில அரசு ஊழியர்களுக்கு…. புதிய இன்சூரன்ஸ் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து பயன் பெறலாம். இந்த காப்பீட்டு திட்டத்தின் பெயர் MEDSEP ஆகும். இந்த திட்டத்தில் இணைபவர்கள் மாதந்தோறும் ரூபாய் 500 செலுத்த வேண்டும். இதில் ஒரு வருடத்திற்கான காப்பீடு 4,800 ரூபாய் ஆகும். இதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

இந்த திட்டமானது அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தில் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப உறுப்பினர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டோரும் இணைந்து பயன்பெறலாம். இந்த அறிவிப்பை நிதித்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் சிங் குமார் வெளியிட்டுள்ளார். மேலும் மாநில அரசின் இந்தத் திட்டத்தினால் 6 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.